current2

இந்தியா

1.2016ஆம் ஆண்டில் இந்தியாவில் இயற்கை விவசாயத்தை முழுமையாக மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது.
2.இன்று தேசிய மருத்துவர்கள் தினம்.பழம்பெரும் மருத்துவரும் மேற்குவங்கத்தின் இரண்டாவது முதல்வருமான டாக்டர். பிதன் சந்திர ராய் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளாகிய ஜூலை 1ம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலகம்

1.இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆர்யா பெர்மானா என்ற அந்த 10 வயது சிறுவன்  190 கிலோ எடையைக் கொண்டிருக்கிறான்.இவர் தான் உலகிலேயே அதிக எடையுள்ள சிறுவன் ஆவார்.
2.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மேடம் டுசாட் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் உள்ளது.நடிகர் அர்னால்ட், இந்திய தேசத் தலைவர்களான காந்தி, நேரு, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தி நடிகர் ஷாருக்கான் உட்பட உலகப் புகழ்பெற்ற  விவிஐபிக்களின் மெழுகு சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
3.இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரிட்டன் நாடாளுமன்றம் முடிவெடுத்த நாள் 01 ஜூலை 1947.
4.இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை அடைந்த நாள் 01 ஜூலை 1960.
5.இன்று ருவாண்டா விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 01 ஜூலை 1962.