current2

தமிழகம்

1.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பமான நாள் 1 ஜுன் 1971.
2.39-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவு திடலில் இன்று துவங்கியது.ஜூன் 13ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறும்.

இந்தியா

1.பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ரசாக் கான் மாரடைப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார்.
2.சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்த நாள் 1  ஜுன் 1980.
3.இன்று உலக பால் தினம்(World Milk Day).

உலகம்

1.சுவிட்சர்லாந்தில் உலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை இன்று திறக்கப்பட்டது.காட்தர்டு பேஸ் சுரங்கம் என்ற பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி ரயில் பாதையின் நீளம் 57 கிலோ மீட்டர்கள் ஆகும்.ஆல்ப்ஸ் மலையை குடைந்து இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது.சுவிஸின் உறி மாகாணத்தில் உள்ள எர்ஸ்ட்பெல்டு என்ற பகுதியில் தொடங்கும் இந்த சுரங்க வழி ரயில் பாதை, டிசினோ மாகாணத்தில் உள்ள போடியோ என்ற பகுதியில் நிறைவடைகிறது.பொதுமக்களுக்கான சேவை அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2.இன்று பன்னாட்டு குழந்தைகள் தினம்(Universal Children’s Day).