தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள ரே‌ஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ரே‌ஷன் கடைகளிலும் உள்தாள்கள் ஓட்டும் பணி இன்று  முதல் தொடங்குகிறது.


இந்தியா

1.ராணுவத்தளபதி தல்பீர் சிங் நேற்று ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து,உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் ரவாத், ராணுவத்தளபதியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
2.இன்று முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.மேலும் வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
3.2016-ம் ஆண்டு மாநிலம் வாரியாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் ”ரெமோ” என்ற வார்த்தை அதிக அளவில் தேடப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ராவில் ”சாய்ரட்” என்ற வார்த்தை அதிகம் தேடப்பட்டுள்ளது.பெரும்பாலான மாநிலங்களில் ஃப்ரீடம் 251 போன் தான் அதிக அளவில் தேடப்பட்டுள்ளது.


உலகம்

1.சீனாவில் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள யுனான் மற்றும் குய்சோகு ஆகிய இரண்டு மாகாணங்களை இணைக்கும் வகையில் பெய்பான்ஜியாங் பாலம் வாகனப் போக்குவரத்திற்குத் திறந்து விடப்பட்பட்டுள்ளது.இரண்டு மலைகளுக்கும் நடுவே ஓடும் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பெய்பான்ஜியாங் பாலத்தின் உயரம் 565 மீட்டர் (1,854 அடி) ஆகும். இது உலகிலேயே மிக உயரமான பாலமாகும். பெய்பான்ஜியாங் பாலம் (Beipanjiang Bridge) எனப்படும் இப் பாலம் 4,396 அடி (1,341 மீட்டர்) நீளமுடையது.


விளையாட்டு

1.கல்மாடி, சவுதாலாவின் நியமனத்திற்கு விளக்கம் தராத, இந்திய ஒலிம்பிக் சங்கத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ‘சஸ்பெண்ட்’  செய்துள்ளது.


சிறப்பு செய்திகள்

பணமில்லா பரிவர்தனைகள் மற்றும் வங்கி தொடர்பானவை.

IMPS —- Immediate Payment Service
UPI —- Unified Payments Interface
NEFT — National Electronic Funds Transfer
RTGS — Real Time Gross Settlement
POS — Point Of Sale
VPA — Virtual Payment Address
AEPS — Aadhar Enabled Payment System
USSD — Unstructured Supplementary Service Data
MMID — Mobile Money Identifier


இன்றைய தினம்

1.ஆங்கிலப் புத்தாண்டு (New Year).
ஜனவரி 1ஆம் நாள் கிரிகோரியன் (Gregorian) நாட்காட்டியின் முதல்நாள். கிரிகோரியன் நாட்காட்டியானது உலகளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஜனவரி 1 ஐ ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டம் முதன்முதலாக மெசபடோமியா (ஈராக்) நாட்டில் கி.மு. 2000 இல் தோன்றியது.
2.இன்று உலக குடும்ப தினம் (Global Family Day).
ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர். உலக முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம். நாட்டிற்கிடையே எந்த பொறாமையும் இன்றி வாழ வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
3.இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமான நாள் 01 ஜனவரி 1858.

 

– தென்னகம்.காம் செய்தி குழு