current-affairs

தமிழகம்

1.தமிழக ஆளுநராக தற்போது மகாராஷ்டிரா ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் கூடுதலாக  கவனிப்பார் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்து உள்ளார்.மேலும் தமிழ்நாட்டின் ஆளுநராக முறைப்படி ஒருவரை நியமிக்கும்வரை அவர் இந்தப் பொறுப்பை கவனிப்பார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர  முன்னாள் முதல்வரான கே. ரோசையாவின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து குடியரசு தலைவர் மாளிகை இந்த அறிவிப்பை வெளியுட்டுள்ளது.மேலும் குஜராத் மாநில ஆளுநரான ஓம் பிரகாஷ் கோலி, மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.இந்தியாவின் குஜராத்தின் சூரத் பகுதியில் நாட்டின் முதல் ஜவுளித்துறை சார்ந்த படிப்புகளுக்கென பல்கலைக்கழகம்  அமைக்கப்பட உள்ளது.குஜராத் மாநில அரசு இதற்காக, ரூ.900 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த பல்கலைக்கழகம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் செயல்பட  துவங்கி விடும்.
2.இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து  மதுகர் குப்தா குழு தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்  சமர்ப்பித்துள்ளது.
3.ஆல் இந்தியா ரேடியோவுக்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண மக்களுக்காக பலூச் மொழியில் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
4.இந்திய ஆன்மிக குருவான சின்மயா குமார் கோஸின் சீடர்கள் அவரது  பிறந்தநாளை முன்னிட்டு கேக் மீது 72 ஆயிரம் மெழுகுவர்த்திகளை ஏற்றி உலக சாதனை புரிந்துள்ளனர்.இந்த கேக் ஆனது 45 அடி நீளம் மற்றும் 10 அடி அகலம் கொண்டது. இந்த மெழுகுவர்த்தி களை கேக்கில் சொருகும் பணியில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

உலகம்

1.ஆப்ரிக்க ஆதரவு அமைப்பு இயக்கத்தின் கணக்கெடுப்பு ஒன்றில் ஆப்ரிக்க கண்டத்தின் யானைகள் எண்ணிக்கை, கடந்த பத்து வருடங்களில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.குறைந்தது 1,44,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.இந்த மிகப்பெரிய யானை கணக்கெடுப்பு, 18 நாடுகளில் சவன்னா நதியின் சுமார் அரை மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கணக்கெடுப்பை நிறைவு செய்ய  இரண்டு ஆண்டுகள் ஆகியது.