தமிழகம்

1.டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் இந்திரா பானர்ஜி , சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.காந்தகுமாரி பட்நாகரை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தலைவராக, பாஜக மூத்த தலைவர் ஹிருதய் நாராயண் தீட்சித் (69),  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.குஜராத் மாநிலத்தில் பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
3.மாசு தரம் 3 மற்றும் மாசு தரம்  2-ன் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 01-ஆம் தேதிக்கு மேல் விற்பனை மற்றும் பதிவு செய்வதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.


விளையாட்டு

1.ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் (ஏஎச்எப்) ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர் எஸ்.வி.சுநீலும், சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு மற்றொரு இந்தியரான ஹர்மான்பிரீத் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இன்றைய தினம்

1.இன்று முட்டாள்கள் தினம் (April Fool’s Day).
ஜனவரி 1 ஐ புத்தாண்டாக 1562ஆம் ஆண்டு முதல் கொண்டாடினர். ஆனால் இதை அறியாத ஜெர்மனி மற்றும் சில நாடுகள் ஏப்ரல் 1 ஐ பழைய முறைப்படி புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கருதுபவர்களை ஏப்ரல் பூல் எனக் கேலியும், கிண்டலும் செய்தனர். ஆகவே இத்தினத்தில் உண்மையில்லாத வதந்திகளை உலகம் முழுவதும் பரப்பி வந்தனர்.
2.சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்ற நாள் 01 ஏப்ரல் 1826.
3.இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாள் 01 ஏப்ரல் 1935.
4.மலாய் கூட்டமைப்பு உருவான நாள் 01 ஏப்ரல் 1946.
5.இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 01 ஏப்ரல் 1957.
6.ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோசுனியாக் ஆகியோரால் தொடங்கப்பட்ட நாள் 01 ஏப்ரல் 1976.
7.சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 01 ஏப்ரல் 1981.
8.நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடான நாள் 01 ஏப்ரல் 2001.
9.கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்திய நாள் 01 ஏப்ரல் 2004.

 

– தென்னகம்.காம் செய்தி குழு