தமிழகம்

1.தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை சிங்காநல்லூர் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த குளத்தில் 396 வகை தாவரங்கள், 160 வகையான பறவைகள், 62 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் உயிர் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது .


உலகம்

1.ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது, இலங்கையில் யுத்த காலத்தில் கணவரை இழந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கிய ஆசிரியை கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.அவர்கள் விவரம் வருமாறு:கெத்சி சண்முகம் – இலங்கை,Yoshiaki Ishizawa – ஜப்பான்,Abdon Nababan – இந்தோனேஷியா,Tony Tay – சிங்கப்பூர்,Lilia de Lima – பிலிப்பைன்ஸ்,Philippine Educational Theater Association ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
2.முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வானி குமார் , ஜப்பான் வழங்கும் மிக உயரிய விருதான Order of the Rising Sun 2017 பெற்றுள்ளார்.
3.இலங்கையின் ஹம்பன்தோட்டா பகுதியில், துறைமுகம் அமைக்கவும், வர்த்தக பணிகள் மேற்கொள்ளவும் (99 ஆண்டுகள்) சீனா ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த துறைமுகத்திற்கு சீன கடற்படையினர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.சர்வதேச தாய்ப்பால் வாரம்(01 ஆகஸ்டு முதல் 09 ஆகஸ்டு வரை).
தாய்ப்பால் கலப்படமற்ற இயற்கை உணவு. குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியாகவும், குழந்தையின் மரணத்தை தடுக்கவும், மேலும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பது என்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
2.1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
3.1774 – ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
4.1941 – முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு