current2

இந்தியா

1.ஆறு மாதங்களுக்குள் நாடெங்கிலும் பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஹிமாசலப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2.ரூ.968 கோடி செலவில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவையும், வங்காளதேசத்தில் உள்ள அக்ஹாவ்ரா நகரையும் இணைக்கும் விதமாக  15 கி.மீ. தூரத்துக்கு புதிய அகல ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று அகர்தலா நகரில் நடந்தது.

உலகம்

1.இன்று உலகத் தாய்ப்பால் வாரம்(World Breastfeeding Week ).ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது.தாய்ப்பால் கலப்படமற்ற இயற்கை உணவு. குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியாகவும், குழந்தையின் மரணத்தை தடுக்கவும், மேலும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பது என்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
2.இன்று உலக சாரணர் தினம்.
3.பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமான நாள் 01 ஆகஸ்டு 1936.
4.முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்ட நாள் 01 ஆகஸ்டு 1941.
5.பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்ட நாள்  01 ஆகஸ்டு 1960.
6.இன்று அங்கோலா நாட்டில்  இராணுவ நாள்.
7.இன்று லெபனான் நாட்டில்  இராணுவ நாள்.