தமிழகம்

1.சென்னையை நிலைகுலையவைத்தது வர்தா புயல்.இந்தப் புயல் காரணமாக 7-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயம் அடைந்தனர்.பல இடங்களில் நேற்று மின்கம்பங்கள் சாய்ந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரமும் நிறுத்தப்பட்டது. செல்போன் கோபுர கேபிள் அறுந்ததாலும், மின்சாரம் இல்லாததாலும் தொலைத் தொடர்பு சேவையில் தடங்கல் ஏற்பட்டது.22 ஆண்டுகளுக்கு பிறகு, இது போன்ற மோசமான புயலை சென்னை சந்தித்துள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


இந்தியா

1.ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, பெட்ரோல் பங்க்குகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு 0.75% சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
2.தேசிய கல்விக் கொள்கையை வகுக்க இன்னும் 10 நாள்களில் குழு அமைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.


உலகம்

1.அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்ய அரசு திரைமறைவு செயல்களில் ஈடுபட்டது என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை டிரம்ப் மறுத்துள்ளார்.
2.ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச்செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார். ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
3.பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ யின் தலைமை இயக்குனராக இருந்த, ரிஸ்வான் அக்தார், அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு நவீத் முக்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நேற்று நீக்கப்பட்டார்.

2.ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் டி.எல்.எஃப். நிறுவனத்தின் நிகர கடன் இரண்டாம் காலாண்டில் ரூ.1,021 கோடி அதிகரித்து ரூ.23,140 கோடியாக இருந்தது.


இன்றைய தினம்

1. 1784 ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் இறந்தார்.

2.1944 சி.டி. நாயகம் காலமானார்.

3.1987 தமிழ் எழுத்தாளர் ந.பார்த்தசாரதி காலமானார்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு