தமிழகம்

1.வர்தா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.தடைபட்டுள்ள மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

2.திருவள்ளூர் மாவட்டத்தில் தொடரும் இருள், குடிநீர் தட்டுப்பாடு, பால் விலை உயர்வு, செல்போன் சேவை முடக்கம் உள்ளிட்டவைகளால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.


இந்தியா

1.2016-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 74 தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை  வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி, 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
2.மாற்றுத்திறனாளிகளை பாரபட்சமாக நடத்துவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

3.சென்னை, கொல்கத்தா, மும்பை உயர் நீதிமன்றங்களின் பெயர்கள் தற்போதைக்கு மாற்றப்பட வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

4.மருத்துவத்தில் டி.எம்., எம்.சி.எச்., பி.டி.சி.சி. போன்ற சிறப்பு பட்ட மேற்படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி), அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


உலகம்

1.யூனிசெப் அமைப்பின் புதிய சர்வதேச நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
2.ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியைக் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
3.பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதுவதால், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிக்க முடிவு செய்துள்ளது.


வர்த்தகம்

1.கடந்த நவம்­பரில், மொத்த விலை பண­வீக்கம், ஐந்து மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 3.15 சத­வீ­த­மாக சரி­வ­டைந்து உள்­ளது. இது, அக்­டோ­பரில், 3.39 சத­வீ­த­மாக இருந்­தது.

2.கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள், நவம்­பரில் மேற்­கொண்ட, இணைத்தல் மற்றும் கைய­கப்­ப­டுத்­துதல் நட­வ­டிக்­கை­களின் மதிப்பு, 16 சத­வீதம் சரி­வ­டைந்து, 206 கோடி டால­ராக குறைந்­துள்­ளது


விளையாட்டு

1.சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பின் சார்பில் , சாய்னா நெஹ்வால் ( Integrity Ambassador for Clean Sports ) நேர்மையான விளையாட்டு தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2.ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 8.30க்கு தொடங்குகிறது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச தேயிலை தினம்.சர்வதேச தேயிலை தொழிலாளர் மாநாடு ஒன்றின் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் உலக சமூக மாமன்ற கூடுதல் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை  நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் தேதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

2. 1932 இந்தியாவில் முதல் முதலாக விமானம் பறந்தது.

3. 1950 இந்தியாவின் முதல் துணைப்பிரதமராக பணியாற்றியப் பெருமையைப் பெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் காலமானார்.

4. 1988 இந்தியாவின் ஒட்டுப்போடும் வயதை 21ல் இருந்து 18ஆக குறைக்க வகை செய்யும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

5. 1991 இந்தியத் திரையுலகில் இமயம் என்று வருணிக்கப்படும் சத்யஜித்ரேக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு