தமிழகம்

1. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91.
2. 1,685 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
3. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் செய்தி தொடர்பாளருமான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் 2016 -ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
4. எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி 17  பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தியா

1.நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக உயர் நீதிமன்றங்களில் 40.54 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 7 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
2.மாஞ்சா நூலுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்குவதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
3.பெங்களூரு – கெம்ப கவுடா பன்னாட்டு விமான நிலையம் இடையே ரூ.6 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுகிறது.


உலகம்

1.கணிப்புகளுக்கு மாறாக சந்திரன் 4.51 பில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் முந்தைய கணிப்பைக் காட்டிலும் 140 மில்லியன் ஆண்டுகள் பழையது என்றும், அப்பல்லோ 14 மிஷன் மூலம் சந்திர மண்டலத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட ‘ஸிர்கான்ஸ்’ (Zircons) என்ற கனிமத்தின் ஆய்வு முடிவுகளின் படி இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
2.மொசூல் நகரத்தில் இருந்து இஸ்லாமிய அரசு குழுவினரை ஒழித்துவிடும் போர் நடவடிக்கையில், மொசூல் பல்கலைக்கழகம் முழுவதையும் அரச படைகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக இராக் அரசு தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது,


வணிகம்

1.மும்பை பங்குசந்தையின் பொதுப் பங்கு வெளியீடு ஜனவரி 23-ம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.1,350 கோடி திரட்ட பி.எஸ்.இ திட்டமிட்டுள்ளது.
2.பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் போயிங் நிறுவனத்தின் மேக்ஸ் 737 விமானங்களில் முதற்கட்டமாக 100 விமானங்களை வாங்க  ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.


விளையாட்டு

1.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் மும்பையை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி முதன்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
2.இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐ.ஓ.ஏ) மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம்.


இன்றைய தினம்

1.இன்று இந்திய ராணுவ தினம்.

இந்திய ராணுவம் உலகின் நான்காம் பெரிய ராணுவம்.
இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப்படை என ஐந்து படைப்பிரிவுகள் உள்ளன. 
தற்போது ராணுவத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றுகின்றனர். 
இந்திய ராணுவம் பாகிஸ்தானுடன் நான்கு முறையும், சீனாவுடன் ஒருமுறையும் போரில் ஈடுபட்டுள்ளது. 
ஐக்கிய நாட்டு அமைதிப்படையிலும், இந்திய ராணுவம் பங்கேற்றுள்ளது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு