விளையாட்டு

1.லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் வான் நியரிக் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.பகாமஸ் வீரர் ஸ்டீபன் வெள்ளி பதக்கத்தையும்,கத்தாரை சேர்ந்த ஹாரூன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் பிரான்ஸ் வீரர் பியா அம்ரோஸ் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.போலந்து வீரர் ஆடம் காஸ்கோட் வெள்ளி பதக்கத்தையும்,கென்யாவை சேர்ந்த கிபியான் பெட் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் கென்யா வீரர் கிப்ருட்டோ தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.மொராக்கோவை சேர்ந்த எல்பார்லி வெள்ளி பதக்கத்தையும்,அமெரிக்க வீரர் இவன் ஜாக்கா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.பெண்களுக்கான ஈட்டி எறியும் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை பார்பரா ஸ்பாட்கோவா தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.


இன்றைய தினம்

1.2000 – உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது.
2.1948 – ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு