ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான 2016-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்நிலைத் தேர்வு

நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மே மாதம் 27-ம் தேதி வரை முடிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 79 பணியிடங்களுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.